நாடாளுமன்றத்தில் பெகாசஸ் பற்றி விவாதிக்க ஒன்றிய அரசு ஏன் பயப்படுகிறது?: அசாதுதீன் ஓவைசி சரமாரி கேள்வி..!!

டெல்லி: நாடாளுமன்றத்தில் பெகாசஸ் பற்றி விவாதிக்க ஒன்றிய அரசு ஏன் பயப்படுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, கூட்டத்தொடரில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கும் போது நீங்கள் எதை மறைக்க விரும்புகிறீர்கள் என வினவியுள்ளார். பெகாசஸ் விவகாரம் காரணமாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் வரிப்பணம் 133 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, நாடாளுமன்றத்தில் பெகாசஸ் பற்றி விவாதிக்க ஒன்றிய அரசு ஏன் பயப்படுகிறது? என கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கும் போது நீங்கள் எதை மறைக்க விரும்புகிறீர்கள் எனவும் வினவியுள்ளார். எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள ஓவைசி, இதுதான் ஜனநாயகமா எனவும் வினவியுள்ளார். முத்தலாக் சட்டம், அரசியலமைப்பு மற்றும் சமத்துவத்துக்கு எதிரானது என அசாதுதீன் ஓவைசி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: