மதுவில் போதை மருந்து: காதலி பலாத்காரம் தொழிலதிபர் மகன் கைது

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அந்தேரியில் வசிக்கும் 30 வயது பெண்ணிடம், வொர்லி பகுதியை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகன் ஆவின் அகர்வாலுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 26ம் தேதி, வொர்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கு, சம்பந்தப்பட்ட பெண்ணை ஆவின் அகர்வால் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, அந்த பெண் வொர்லி போலீசில் அளித்த புகாரில், ‘டேட்டிங் செயலியான டிண்டர் மூலம் ஆவின் அகர்வாலுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது.

பின்னர் இருவரும் காதலித்து வந்தோம். சம்பவ நாளில் தனது பிறந்த நாள் எனக்கூறி, ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு எனக்கு மதுவுடன் போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். அவர் என்னை பலாத்காரம் செய்த போது, எனக்கு சுயநினைவு இல்லை. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். அதையடுத்து, வொர்லி  போலீசார் ஐபிசியின் 376 மற்றும் 328 பிரிவுகளின் கீழ் ஆவின் அகர்வாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>