இந்தியாவிலேயே முதல்முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி போடும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை  முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 6 தனியார் நிறுவனங்கள் 2.37 கோடி ரூபாயில் 36,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் அரசு சார்பில் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு ஒரு டோஸுக்கு கணிசமான தொகையை மருத்துவமனை நிர்வாகம் பெற்று கொண்டு ஊசி போடுகிறது.

இந்த நிலையில் பெருநிறுவனங்கள் பங்களிக்கும் சமூக பொறுப்பு நிதியை (சிஎஸ்ஆர்) கொண்டு தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.  இந்த திட்டத்தை சென்னையில் ஆழ்வார்பேட்டை காவிரி மருத்துவமனையில் அடையார் ஆனந்தபவன் உணவகத்தின் சிஎஸ்ஆர் நிதியில் இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

மேலும், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், இலவச கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிக்கு இந்திய தொழிற் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் சந்திரகுமார் அவர்கள், இந்திய தொழிற் கூட்டமைப்பின் கூட்டாண்மை சமூக பங்களிப்பு நிதியிலிருந்து 2 கோடியே 20 லட்சம்  ரூபாய்க்கான காசோலையும், அடையாறு ஆனந்தபவன் சார்பில் அதன் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.டி. சீனிவாச ராஜா அவர்கள் 7 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கினர். 

இதைத் தொடர்ந்து நாளை முதல் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது.இதன் மூலம் இந்தியாவிலேயே முதல்முறையாக தனியார் மருத்துவமனைகளில் சிஎஸ்ஆர் பங்களிப்பில் இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழ்நாடு தொடங்கயிருக்கிறது.

Related Stories: