நடிகரிடம் விவாகரத்து கோரி மனைவி நோட்டீஸ்

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் முகேஷ். சிபிஎம் கட்சியை சேர்ந்தவர். தற்போது கொல்லம் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். கடந்த 1987ல் நடிகை சரிதாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகன் உண்டு. தொடர்ந்து 25 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 2011ல் இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில், நடன கலைஞரான மேதில்தேவிகாவுடன் முகேசுக்கு தொடர்பு ஏற்பட்டது. பின்னர் 2013ல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். மேதில்தேவிகாவுக்கும் இது 2வது திருமணமாகும். இந்த நிலையில் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து மேதில்தேவிகா விவாகரத்து கோரி கொல்லம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். முகேஷுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories:

>