பணம் இல்லாததால் 1 ஏக்கர் நிலத்தை ஆட்டைக் கொண்டே உழுத விவசாயி : கிராம மக்கள் வியப்பு

ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ஏழை விவசாயி ஒருவர் போதிய பணம் இல்லாததால் செம்மறி ஆட்டை பயன்படுத்தி தனக்கு சொந்தமான நிலத்தை உழுது கிராம மக்களை வியப்படைய செய்துள்ளார். கர்னூல் மாவட்டத்தில் உள்ள வெங்கடகிரி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சன் என்ற ஏழை விவசாயிக்கு ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. தனக்கு சொந்தமான இந்த நிலத்தை உழுதுவதற்கு போதிய  பணம் இல்லாததால் தனது மனைவி யோசனையின் பெயரில் செம்மறி ஆட்டை கொண்டு உழுதுள்ளார்.

அவரது மனைவி சிறிய ஏர் கலப்பையை பிடித்துக் கொள்ள ஆட்டிற்கு முன் அவரது மகள் புற்களை காட்டியபடி செல்ல அதனை தின்று கொண்டே செம்மறி ஆடு ஏர் உழுதது. 1 ஏக்கர் நிலத்தை உழுவதற்கு 7000 ரூபாய் தன்னிடம் இல்லாததால் செம்மறி ஆட்டை கொண்டு விவசாயி ஏர் உழுதுள்ளார். செம்மறி ஆட்டை கொண்டு ஏர் உழுததை பார்த்த கிராம மக்கள் வியப்படைய செய்தனர்.

Related Stories: