தடையை மீறி சென்னை முதல் கன்னியாகுமரி வரை ‘ஜெய்ஹிந்த்’பைக் பிரசாரம் நடத்த முயன்றவர் கைது

சென்னை: சென்னை மெரினாவில் இருந்து கன்னியாகுமரி வரை ‘ஜெய்ஹிந்த்’ முழுக்கத்துடன் நடைபெற இருந்த பைக் பிரசாரம் செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். ஜெய்ஹிந்த் கோஷத்தை முழுங்கிய சுதந்திர போராட்ட வீரர் சென்பக ராமன் பிள்ளை நினைவு கூறும் வைகியல் சென்னையில் இந்து தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஆர்.கே.ஆனந்த் தலைமையில் நேற்று காலை 11 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை முன்பாக ‘ஜெய்ஹிந்த் கோஷத்தை’ முழக்கமிட்டு இரு சக்கர வாகனத்தில் சாலை மார்கமாக புறப்பட்டு சென்று கன்னியாகுமரியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் செண்பகராமன் பிள்ளை மணிமண்டபத்தில் ஜெய்ஹிந்த் கோஷமிட்டு நிறைவடைகிறது.

இதற்கான அனுமதி கேட்டு சென்னை மாநகர காவல் துறையில் இந்து தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் விண்ணப்பித்திருந்தார். ஆனால் கொரோனா காலம் என்பதாலும், மெரினால் பேரணி உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படாத காரணத்தில் சென்னை மாநகர காவல் துறை ஜெய்ஹிந்த் பைக் பிரசாரத்துக்கு தடைவிதித்தது. ஆனால் போலீசாரின் தடையை மீறி சென்னை முதல் கன்னியாகுமரி வரை இந்து தேசிய முன்னணி சார்பில் ஜெய்ஹிந்த் முழக்கத்துடன் பைக் பிரசாரம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து சைதாப்பேட்டை போலீசார் இந்து தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தை நேற்று முன்தினம் இரவு அதிரடியாக கைது செய்தனர். அவருடன் அவரது ஆதரவாளர்கள் பலரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: