கட்சியில் உழைப்பவர், விசுவாசிகளுக்கு மரியாதை இல்லை அதிமுகவில் எடப்பாடி ஒரு சர்வாதிகாரியாக செயல்படுகிறார்: திமுகவில் இணைந்த முன்னாள் எம்பி பி.ஆர்.சுந்தரம் பேட்டி

சென்னை: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்டம், அதிமுகவைச் சேர்ந்த நாமக்கல் மாவட்ட அவைத்தலைவரும்- முன்னாள் எம்பி, எம்எல்ஏவுமான நாமக்கல் பி.ஆர்.சுந்தரம் திமுகவில் நேற்று இணைந்தார். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஆ.இராசா, அந்தியூர் ப.செல்வராஜ், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

கட்சியில் இணைந்த பி.ஆர்.சுந்தரம் அளித்த பேட்டி: அதிமுக ஒரு சாதி கட்சியாக மாறி விட்டதாக மாறி விட்ட காரணத்தால், இன்றைக்கு அவர்கள் பின்னால் நின்று செயல்படுவதற்கு நான் தயாராக இல்லை. எடப்பாடி பழனிச்சாமி இன்றைக்கு கட்சியை மறந்து விட்டு, இன்றைக்கு சர்வாதிகார போக்குடன் இன்றைக்கு யாரையும் நீக்கலாம் என்று கட்சியை நடத்தி  கொண்டிருக்கிறார். அவருக்கு பின்னால் தங்கமணி, வேலுமணி தான் கட்சியை ஆட்டி படைக்கிறார்கள்.  இன்றைக்கு அதிமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. விசுவாசிகளுக்கு மரியாதை இல்லை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அதிமுகவில் இல்லை என்றார்.

* ஓபிஎஸ் ரப்பர் ஸ்டாம்ப்

முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் மேலும் கூறியதாவது, ‘‘ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக  இருந்தாலும் அவர் ஒரு ”ரப்பர் ஸ்டாம்ப்”. அவர் எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார். அவருக்கு துணை முதல்வர் பதவி வந்தால் போதும், தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தால் போதும். இது தான் அவர் செயல்பாடு’’ என்றார்.

Related Stories: