கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 17 திருமண மண்டபங்களுக்கு ரூ.84 ஆயிரம் அபராதம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 17 திருமண மண்டபங்களுக்கு ரூ.84,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த திருமண மண்டபங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும் ஓட்டல்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது மாநகராட்சி வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவினர் மாதவரம், திருவொற்றியூர், ராயபுரம், அண்ணாநகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் மேற்கொண்ட கள ஆய்வில்  அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 17 திருமண மண்டபங்களுக்கு ரூ.84,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மாநகராட்சி வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவினர் மூலம் நிகழ்ச்சிகள் நடைபெற்ற 946 இடங்களில் கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றப்படுகின்றனவா என  ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: