சமூக ஊடகங்களை தவறான நோக்கத்திற்கு பயன்படுத்தும் விவகாரம்: பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் எம்.பி.க்கள் குழுவிடம் ஆஜராகி விளக்கம்

டெல்லி: சமூக ஊடகங்களை தவறான நோக்கத்திற்கு பயன்படுத்தும் விவகாரம் தொடர்பான விசாரணையில் பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழுவிடம் ஆஜராகி விளக்கமளித்தனர். சமூக தளங்கள் வாயிலாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுப்பது தொடர்பாக அந்நிறுவனங்களின் பிரதிநிதிகளை தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு சந்தித்து வருகிறது.

இவ்வரிசையில் டுவிட்டர் நிறுவன அதிகாரிகளை சந்தித்த போது இந்த மண்ணின் சட்டங்களை தான் நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று சசிதரூர் எம்.பி தலைமையிலான குழு கடுமையாக கண்டித்திருந்தது. இந்நிலையில் பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவன அதிகாரிகள் எம்.பி.க்கள் குழுவை சந்தித்து தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். அடுத்து யுடியூப் உள்ளிட்ட மற்ற சமூக தள நிறுவனங்களுக்கு எம்.பி.க்கள் குழு சம்மன் அனுப்பும் என்று தெரிகிறது.

Related Stories: