மாடர்னாவை தொடர்ந்து விரைவில் ஃபைசருக்கு அனுமதி: நிதி ஆயோக்கின் சுகாதாரத்துறை உறுப்பினர் தகவல்

டெல்லி: இந்தியாவில் ஃபைசர் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான உடன்பாடும் விரைவில் எட்டப்படும் என நிதி ஆயோக்கின் சுகாதாரத்துறை உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் அவசர காலத்தில் மட்டுமே பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனால் இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி வரிசையில் மாடெர்னாவும் பயன்பாட்டுக்கு வந்திருப்பதாக கூறினார். இந்த 4 தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை என்றும் பாலூட்டும் தாய்மார்களும் தயக்கமில்லாம் செலுத்திக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் மற்றொரு தடுப்பூசியான ஃபைசரை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான உடன்பாடு விரைவில் எட்டப்படும் என்றும் வி.கே.பால் தெரிவித்தார்.

Related Stories: