பெருவாயல் டிஜெஎஸ் பள்ளியில் யோகாவில் சாதித்த 3 பேருக்கு பாராட்டு: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: யோகாவில் உலக சாதனை படைத்த பெருவாயல் டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளியை மாணவன், மாணவி மற்றும் அதன் பயிற்சி ஆசிரியருக்கு   பாராட்டு விழா நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அருகே பெருவாயல் பகுதியில் இயங்கி வரும் டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளியில் 6ம் வகுப்பு மாணவன் ஆர்.ஜி.யுவன்(10). கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில், ஒரு நிமிடத்தில் 21 முறை நிரம்பல பூரண சக்ராசனம் செய்து உலக சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன், ஒரு நிமிடத்தில் 21 முறை ஒரு மாணவி நிரலம்ப பூரண சக்ராசனம் யோகாவில் உலக சாதனையை படைத்திருந்தார் எனக் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து 26 முறை நிரம்பல பூரண சக்ராசனம் செய்து, ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்’ மற்றும் `ஆவ்சம்’ உலக சாதனை புத்தகத்தில் ஆர்.ஜி.யுவன் இடம்பிடித்திருக்கிறார். இதேபோல், இப்பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் ஏ.சஞ்சனா(9). என்ற மாணவி கண்பெருடாசனம் மூலமாக 52 பந்துகளை கால்களால் எடுத்து, பின்புறம் வீசி, ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்’, ‘ஆவ்சம்’ ஆகிய உலக சாதனை புத்தகத்தில், புதிய சாதனை பக்கத்தில் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில், யோகாவில் உலக சாதனை படைத்த மாணவன் ஆர்.ஜி.யுவன், மாணவி ஏ.சஞ்சனா மற்றும் அவர்களை பயிற்றுவித்த யோகா ஆசிரியர் எஸ்.சந்தியா ஆகிய 3 பேருக்கும் நேற்று  முன்தினம் மாலை டிஜெஎஸ் பள்ளி வளாகத்தில் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் டிஜெஎஸ் கல்வி குழும தலைவரும், கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன், பள்ளி தாளாளர் தமிழரசன் உள்பட பல்வேறு பள்ளி நிர்வாகிகள் பங்கேற்று, 3 பேரையும் பாராட்டி பரிசளித்து கவுரவித்தனர்.

கொரோனா நிவாரணம்

ஊத்துக்கோட்டையில் அனைத்திந்திய கிறிஸ்தவ சபைகள் சார்பில் கூட்டமைப்பு சார்பில் கிராம போதகர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ சபைகள் தலைவர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, பேரூர் செயலாளர் அப்துல் ரசீத், முன்னாள் பேரூராட்சி தலைவர் மு.ராதாகிருஷ்ணன், போதகர்கள் மனோ டேனியல், ஒருங்கிணைப்பாளர் முரளி மனோ, பிரின்ஸ்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், போதகர் சவுந்தரபாண்டியன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு கிராம மத போதகர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கினார்.

Related Stories: