திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் கோவில்களில் அர்ச்சனை செய்யவும் தேங்காய் உடைக்கவும் அனுமதி இல்லை :அமைச்சர் சேகர் பாபு பேட்டி

பெரம்பூர் : திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் கோவில்களில் அர்ச்சனை செய்யவும் தேங்காய் உடைக்கவும் அனுமதி இல்லை என்றும் திருநீறு, குங்குமம் தட்டில் வைத்து வழங்கப்படும் என்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை பெரம்பூர் பேரக்ஸ் ரோடு திருக்கோயில் பணியாளர்களுக்கான கொரோனோ நோய் தொற்று பரிசோதனை முகாமை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.பின்னர்  செய்தியாளரிடம் பேசுகையில் இந்து அறநிலை துறை கோயில் நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. கோயில் நிலங்களை பிற பணிகளுக்கு தந்து அதில் வரும் வருமானம் மூலம்  கோயில் வளர்ச்சிக்கு அளிக்கப்படும்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற முறைப்படி தற்போது தமிழகத்தில் 207.பேர பயிற்சி முடித்து  உள்ளனர்.சைவ மற்றும் வைணம்  வழிபாட்டு தலங்களில் பயிற்சி முடித்த அர்ச்சகர்கள் மீண்டும் ஒரு  தேர்வு எழுத்திய  பின் கோயில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் தமிழகத்தின் பாரம்பரிய சிலைகள் கடத்தப்பட்டு இருக்கிறது அதை உடனடியாக சட்டரீதியாக தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசு எடுக்கும் வரும் திங்கட் கிழமை முதல் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில்  கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அனைத்து கோயில் அர்ச்சகர் மற்றும் பணியாளர்கள் கொரோனா பரிசோதனை செய்வதற்கு வசதியாக நாள்ஒன்றுக்கு 500 பேருக்கு பரிசோதனை  மேற்க்கொள்ளப்படும் என்றார். இந்த நிகழ்வின் போது எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Related Stories: