சென்னை பல்கலை தகவல் எம்.பில் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை ரத்து

சென்னை: இந்த கல்வியாண்டுக்கான எம்.பில் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து இணைப்பு கல்லூரிகளுக்கு பல்கலைகழக பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பல்கலைகழக சிண்டிகேட் கூட்டம் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி சென்னை பல்கலைகழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பான எம்.பில் படிப்புகளுக்கு 2021-2022 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி கல்லூரிகளில் எம்.பில் படிப்பிற்கு இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படகூடாது. மேலும் பல்கலைமற்றும் கல்லூரிகளில் ஏற்கனவே எம்.பில் படிக்கும் மாணவர்கள், சென்னை பல்கலைகழகம் அறிவுறுத்தியுள்ள குறிப்பிட்ட கால வரையறைக்குள் படிப்பை முடிக்க வேண்டும்.

Related Stories: