குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாததால் தேவகவுடா 2 கோடி நஷ்டஈடு தர வேண்டும்: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு:  நந்தி இன்ப்ராஸ்டிரக்சர் காரிடார்  (நைஸ்) நிறுவனத்திற்கு எதிராக முன்னாள் பிரதமர் தேவகவுடா சுமார் 25 ஆண்டுக்கு மேலாக நிலம் கையகப்படுத்தல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை  கூறி வருகிறார். தேவகவுடாவின் குற்றச்சாட்டு தங்கள்  நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டிய நைஸ்  நிறுவனம், தேவகவுடா மீது பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மான  நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தது. அம்மனு நீதிபதி மல்லனகவுடா முன் விசாரணை நடந்தது. நைஸ்  நிறுவனம் மீது தேவகவுடா கூறிய குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்கள் தாக்கல்  செய்யவில்லை. போதிய கால அவகாசம் வழங்கியும் குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறினார். இதனால், நைஸ் நிறுவனத்திற்கு தேவகவுடா 2 ேகாடி நஷ்டஈடு வழங்க  வேண்டும் என்று நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

Related Stories: