மஹாராஷ்டிராவில் கரும்பூஞ்சை நோய்க்கு 729 பேர் உயிரிழப்பு; மாநில சுகாதாரத் துறை தகவல்

மஹாராஷ்டிரா: மஹாராஷ்டிராவில் கரும்பூஞ்சை நோய்க்கு 729 பேர் உயிரிழந்து உள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் 2வது அலையில் நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்களை கரும்பூஞ்சை பாதித்து வருகிறது. மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக நாக்பூர் மாவட்டத்தில் 104 பேரும், புனேவில் 90 பேரும், ஒவுரங்காபாத்தில் 75 பேரும் கரும்பூஞ்சைக்கு உயிரிழந்து உள்ளனர். மஹாராஷ்டிராவில் ஜூன் 19ம் தேதி காலை 11:00 மணி வரை, மொத்தம் 7,998 பேர் கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

 அதில், 729 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 4,398 பேர் சிகிச்சையில் உள்ளனர் என சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா முதல் அலையில் இல்லாத கரும்பூஞ்சை, 2வது அலையில் அதிகளவில் பாதிப்பை உண்டாக்குகிறது. மகாராஷ்டிரா மட்டுமல்லாமல் தமிழகத்திலும் கொரோனா நோய் பரவி வருகிறது. தற்போது கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒரு பக்கம் இருக்க பச்சை பூச்சை நோய் பரவி வருகிறது,

Related Stories:

>