ஒரே வாரத்தில் ரயிலில் 32 லட்சம் பேர் பயணம்

புதுடெல்லி: கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 32 லட்சம் பயணிகள் ரயிலில் பயணம் செய்துள்ளனர் இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறைய தொடங்கி உள்ளது. இதன் காரணமாக, சொந்த ஊர்களுக்கும், வேலைக்கும் செல்வோரின்  எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இந்நிலையில், ரயில்வே அமைச்சக செய்தி தொடர்பாளர் நேற்று அளித்த பேட்டியில், “இம்மாதம் 11 முதல் 17ம் தேதி வரையில் புலம் பெயர் தொழிலாளர்கள், மக்கள் என, நீண்ட தூர ரயில்களில் 32.56 லட்சம்  பேர் பயணம் செய்துள்ளனர்.

கிழக்கு உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சராசரியாக 110.2% பேர் டெல்லி, மும்பை, புனே, சூரத், அகமதாபாத், சென்னை உள்ளிட்ட நாட்டின் இதர இடங்களுக்கு சென்றுள்ளனர்.  புலம் பெயர் தொழிலாளர்களின் வசதிக்காக முழுவதும் முன்பதிவு ரயில்களாக இயக்கப்படுகின்றன. 18ம் தேதி வரை 983 மெயில்கள், எக்ஸ்பிரஸ், விடுமுறைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 1,309 கோடைக்கால சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன,” என்றார்.

ஜம்மு காஷ்மீரில் வை-பை சேவை

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘காஷ்மீரில் உள்ள மேலும்14 ரயில் நிலையங்களில் வை-பை வசதி அளிக்கப்படும். இங்கு, ஏற்கனவே 15 ரயில் நிலையங்களில் இந்த வசதி உள்ளது. இதன்மூலம், ஜம்மு காஷ்மீர் ரயில் நிலையங்கள் அனைத்தும் வைபை வசதியை பெறகின்றன,’ என கூறியுள்ளார்.

Related Stories: