மத்திய அமைச்சர் பாதுகாப்பு வாகனங்கள் திடீர் வாபஸ்: கேரள அரசு அதிரடி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் வந்த மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளீதரனின் 2 பாதுகாப்பு வாகனங்களை கேரள அரசு வாபஸ் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜ.வை சேர்ந்த முரளீதரன், வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருக்கிறார். நேற்று இவர் திருவனந்தபுரம் வந்தார். இவருக்கு வழக்கமாக பைலட் மற்றும் எஸ்கார்ட் வாகனங்கள் முன்னும், பின்னுமாக பாதுகாப்புக்கு செல்லும். நேற்று முரளீதரன் திருவனந்தபுரம் வந்தபோது, அவருக்கு இந்த 2 பாதுகாப்பு வாகனங்களும் வழங்கப்படவில்லை. வழக்கமாக அவருடன் செல்லும் பாதுகாவலரான பிஜு என்பவர் மட்டுமே இருந்துள்ளார்.

பாதுகாப்பு வாகனங்கள் வரும் என்று கருதி சிறிது நேரம் அமைச்சர் முரளீதரன் விமான நிலையத்தில் காத்திருந்தார். ஆனால், நீண்ட நேரமாகியும் வாகனங்கள் வரவில்லை. இதையடுத்து, முரளீதரன் அவரது காரில் புறப்பட்டு சென்றார். அவருடன் பாதுகாவலர் பிஜுவும் சென்றார். திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்பு அருகே கார் சென்ற போது திடீரென காரை நிறுத்துமாறு கூறி தன்னுடைய பாதுகாவலர் பிஜுவை ரோட்டில் இறக்கி விட்டார். பாதுகாப்பு வாகனங்கள் தனக்கு இல்லாத நிலையில், கேரள அரசின் பாதுகாவலரும் தனக்குத் தேவையில்லை என்று முரளீதரன் கூறினார்.

Related Stories:

>