ராகுல் காந்தி பிறந்த நாளில் ஆடம்பர கொண்டாட்டம் வேண்டாம்: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: ஆடம்பர கொண்டாட்டங்களை தவிர்த்து, ராகுல் காந்தி பிறந்தநாளில் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: காங்கிரஸ் கட்சியின் ஒப்பற்ற தலைவர் ராகுல் காந்தியின் 50வது பிறந்தநாள் விழா, வருகிற ஜூன் 19ம் தேதி மிக எளிமையாக, ஆடம்பரமில்லாமல் ஆக்கப்பூர்வமான முறையில் கொண்டாடப்படுகிறது. கொரோனா நிவாரண நாளாகக் கடைப்பிடிப்பதன் மூலம் ஏழை, எளிய மக்களின் அன்பையும், ஆதரவையும் பெறுகிற வகையில் காங்கிரஸ் கட்சியினர் நலத்திட்ட உதவிகள் செய்ய வேண்டும். இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிற தலைவராக விளங்குகிற ராகுல் காந்தியின் பிறந்தநாளில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்கிற வகையில் செயல்படுவதே, அவருக்கு நாம் சொல்லும் பிறந்தநாள் வாழ்த்தாக இருக்க முடியும்.

Related Stories:

>