துங்கபத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு

பெங்களூரு: கர்நாடகாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் கடலோர மாவட்டங்களில் தென்மேற்கு  பருவமழை தொடங்குவது வழக்கம்.  இவ்வாண்டு ஜூன் 7ம் தேதி மழை தொடங்கினாலும்  எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இந்நிலையில்  தென்மேற்கு பருவமழை வடகர்நாடக பகுதியில் உள்ள பல்லாரி, ரெய்ச்சூர், பீதர்,  கல்புர்கி, யாதகிரி, ஹுப்பள்ளி-தார்வார், ஹாவேரி, கதக், கொப்பள், பெலகாவி,  பாகல்கோட்டை, விஜயபுரா ஆகிய 12 மாவட்டங்களில் வெளுத்து வாங்கி  வருகிறது. வடகர்நாடக பகுதியில் உள்ள கிருஷ்ணா,  பீமா, துங்கபத்ரா, மலபிரபா, கடபிரபா நதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.  பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.

Related Stories: