தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளார்: சேம.நாராயணன் அறிக்கை

சென்னை:மக்கள் தேசிய கட்சி தலைவரும் முன்னாள் வாரியத்தலைவருமான சேம.நாராயணன் வெளியிட்ட அறிக்கை:தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் மே மாதம் 7ம் தேதி முதல்வராக பதவியேற்ற தினம் முதலே அதிகாரிகளை அழைத்து ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை அழைத்து ஜனநாயக முறைப்படி கருத்துக்களைகேட்டு இரவு, பகல் பாராமல் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக் கொண்டார். அது மட்டுமின்றி அமைச்சர்களையும் மாவட்டங்களுங்கு நியமித்து இன்றைக்கு கொரோனா பரவலை படிப்படியாக குறைத்து வெற்றிக் கண்டுள்ளார். மேலும், திமுக அரசு கொடுக்கும் நிவாரண உதவிகளில் முதல்வர் படம் இல்லை. தங்களை விளம்பரம் படுத்திக்கொள்ளவில்லை. அனைத்திலும் வெளிப்படை தன்மை கடைப்பிடிக்கப்படுகிறது.

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிப்படி நியாயவிலை கடைககள் மூலம் வழங்கும் 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கியதிலும் இரண்டாவது தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 விதமான மளிகை பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன்களிலும் முதல்வர் புகைப்படம் இல்லை. மாறாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முதல்வரின் வைர வரிகளான ‘‘நம்மையும் நாட்டு மக்களையும் காப்போம், தொற்றுக்களிலிருந்து தமிழகத்தை மீட்போம்’ என்று இடம்பெற்றுள்ளது இது மிகவும் வரவேற்று பாராட்டுக்குரியதாகும். தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி இந்தியாவிற்கே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக கொண்டு செல்ல தன்னை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளார் என்பது பதவியேற்ற 30 நாட்களிலேயே, தெள்ள தெளிவாக தெரிகிறது. அவரின் முயற்சிக்கு கட்சி மாட்சியர்களுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தின் ஓட்டுமொத்த வளர்ச்சிக்கும் அனைவரும் துணை நிற்போம்.

Related Stories: