மூட நம்பிக்கை பரவும் என்பதால் கொரோனா மாதா கோயில் இடிப்பு

பிரதாப்கர்: நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றின் காரணமாக புதிய பாதிப்புகள், இறப்புக்கள் அதிகரித்து வருகின்றது. மக்கள் கொரோனா நோயினால் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் ஜூகி சுக்லாபூர் கிராமத்தில் சிலர் கொரோனா மாதா கோயிலை கட்டி பூஜை செய்து வழிப்பட்டனர். இதனால், தங்களை கொரோனா தாக்காது என்று நம்பினர். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம், இது மூட நம்பிக்கையை வளர்த்து விடும் என கருதி இந்த கோயிலை இடித்து தரைமட்டமாக்கி உள்ளது. மேலும், கோயில் கட்டியது தொடர்பாக விசாரணையும் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக காவல் துறை ஐஜி கேபி.சிங் கூறுகையில், “பொதுமக்கள் மூடபழக்கவழக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த கிராமத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

Related Stories:

>