தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது: பாஜ தலைவர் எல்.முருகன் பேட்டி

சென்னை: தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது என்று பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது, நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் சென்னை தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக தலைவர் எல்.முருகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு எல்.முருகன் அளித்த பேட்டியில், ‘‘கொரோனா தொற்று தமிழகத்தில் இன்னும் கட்டுப்படுத்தப்படாத சூழலில் தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க கூடாது. மத்திய அரசு தேவையான தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. செங்கல்பட்டு மையத்தில் ஆய்வு நடந்து வருகிறது. மத்திய அரசு நல்ல முடிவை எடுக்கும்” என்றார்.

Related Stories:

>