காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 370-ஏ சட்டம் ரத்து வாபஸ் : திக்விஜய் சிங் கருத்தால் சர்ச்சை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் தொடர்பாக காங்கிரஸின் மூத்த தலைவரன திக் விஜய் சிங் கூறியது சர்ச்சையாகியுள்ளது.   சமீபத்தில் கிளப்ஹவுஸ் என்ற சமூகவலைதளம் வழியே பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தியாளருடன் உரையாடினார் திக் விஜய் சிங். அப்போது, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் மிகுந்த துயரமளிப்பதாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 370 ஏ மீண்டும் அமல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார். இந்த ஆடியோ ஊடகங்களில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   இதுபற்றி ரவீந்தர் ரைனா கூறுகையில், ‘‘பிரிவினைவாதிகளுடனும், தீவிரவாதிகளுடனும் காங்கிரஸ் தொடர்பில் இருந்து வருகிறது. அதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம்.’’ என்றார்

Related Stories:

>