பள்ளி கல்வி செயல் திறன் தரவரிசை 2 யூனியன் பிரதேசங்கள், 3 மாநிலங்கள் முதலிடம்: மத்திய கல்வி அமைச்சகம் வெளியீடு

புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட 2019-20ம் ஆண்டிற்கான பள்ளி கல்வி செயல்திறன் தர வரிசைப் பட்டியலில் கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு முதல் கிரேடுக்கு முன்னேறி உள்ளது. தேர்ச்சி, கல்வி அணுகல், உள்கட்டமைப்பு வசதிகள், கணக்கெடுப்பு தகவல்களைப் பயன்படுத்துதல், மூன்றாம் தர சரிபார்ப்பு உள்ளிட்ட 70 வகையான அளவீடுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பள்ளி கல்வி செயல்திறனை மத்திய கல்வி அமைச்சகம் தர வரிசைப்படுத்துகிறது. 2019-20ம் ஆண்டுக்கான பள்ளி கல்வி செயல்திறன் தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில், தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் மாநிலங்களும், சண்டிகர், அந்தமான் நிக்கோபர் தீவுகள் யூனியன் பிரதேசங்களும் முதல் இடத்தை பிடித்துள்ளன. இவை ஐந்தும் 901-950 புள்ளிகளுடன் கிரேடு ஏ++ தரத்தை பெற்றுள்ளன.

இம்முறை, கிரேடு ஏ+ தரவரிசையில் தாதர் நாகர் ஹவேலி, குஜராத், அரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, புதுச்சேரி, ராஜஸ்தான் மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. தரவரிசையில் லடாக் கடைசி இடத்தில் உள்ளது. உள்கட்டமைப்பு, வசதிகளில் பீகார், மேகாலயா மாநிலங்கள் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 10% அல்லது அதற்கு மேற்பட்ட அளவிற்கு கல்வி துறையில் முன்னேற்றம் கண்டுள்ளன. 19 மாநிலங்கள் 10 சதவீதம் அளவிற்கு வளர்ந்துள்ளன என மத்திய கல்வி அமைச்சகம் கூறி உள்ளது.

Related Stories: