யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, மே.வங்கத்தில் பிரதமர் இன்று ஆய்வு

ராஞ்சி: மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் நேற்று முன்தினம் காலை ஒடிசா-மேற்கு வங்கம் இடையே பாலாசோர் அருகே கரையை கடந்தது. இதனால், ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோர மாவட்டங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதன் காரணமாக குடியிருப்புகள், கடைகளை வெள்ளம் சூழ்ந்தது. பல இடங்களில் கடல் நீர் புகுந்தது. புயல் தாக்கியதில் 3.5 லட்சம் வீடுகள் சேதமடைந்தது. ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் பலியாகினர். கரையை கடந்த புயல் வலுவிழந்து ஜார்க்கண்ட் நோக்கி நகர்ந்தது. இதனால், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நேற்று பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. சிம்திகா உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், யாஸ் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்கிறார். தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் பாதிப்பு குறித்து முதல்வர் மம்தா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளார்.

Related Stories: