பாரீசிலிருந்து வந்த மும்பை விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக தரை இறக்கம்

மும்பை: பாரீசிலிருந்து மும்பை வந்த விஸ்தாரா விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவசரமாக தரையிறக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரீசின் சார்லஸ் டி கல்லி விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் 294 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன் புறப்பட்டது. இந்த விமானம் நேற்று காலை மும்பையை நெருங்கிய நிலையில், பயணிகளுக்கு குமட்டல் ஏற்படும் போது தரப்படும் பையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வாசகங்களுடன் துண்டு சீட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து எச்சரிக்கை செய்யப்பட்டது. காலை 10.19 மணிக்கு மும்பை சத்ரபதி விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கி, பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. முன்னதாக நேற்று முன்தினம் சென்னையிலிருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

The post பாரீசிலிருந்து வந்த மும்பை விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக தரை இறக்கம் appeared first on Dinakaran.

Related Stories: