பஞ்சாபில் சரக்கு ரயில்கள் மோதி விபத்து

பதேகார் சாகிப்: பஞ்சாப்பில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் மீது இன்னொரு சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 லோகோ பைலட்டுகள் படுகாயமடைந்தனர். பஞ்சாப்,பதேபூர்சாகிப் அருகில் உள்ள சர்ஹிந்த் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நேற்று நின்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அதே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் நின்று கொண்டிருந்த ரயிலின் மீது மோதியது. சரக்கு ரயில் மோதியதில், ரயிலின் இன்ஜின் கழன்று ஓடியதில் பக்கத்து தண்டவாளத்தில் நின்றிருந்த பயணிகள் ரயிலின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் லோகோ பைலட்டுகள் விகாஸ் குமார்,ஹிமான்சு குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். விகாஸ் குமாருக்கு தலையிலும்,ஹிமான்சு குமாருக்கு முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பாட்டியாலா ராஜேந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பப்பட்டனர் என பதேபூர் சாகிப் சிவில் மருத்துவமனை டாக்டர் தெரிவித்தார். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் ரயில்கள் ராஜ்புரா,பாட்டியாலா,துரி மற்றும் சண்டிகர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன என்று ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.

 

The post பஞ்சாபில் சரக்கு ரயில்கள் மோதி விபத்து appeared first on Dinakaran.

Related Stories: