பெரம்பலூரில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு கபசுர குடிநீர்-டிஎஸ்பி வழங்கினார்

பெரம்பலூர் : ஊரடங்கை அமுல்படுத்தும் போலீசாருக்கு கபசுரக் குடிநீரை பெரம்பலூர் டிஎஸ்பி சரவணன் வழங்கினார்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கினை மக்கள் முழுமையாக கடைபிடிக்க ஏதுவாக பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில் தலைநகரான பெரம்பலூர் நகராட்சி, மாவட்ட எல்லைகள், தாலுகா தலைமை இடங்களில், பேரூராட்சிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சியில் ஊரடங்கு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள இன்ஸ்பெக்டர், சப்.இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார், டிராபிக் போலீசார், ஊர்க்காவல் படையினர் அனைவருக்கும் பெரம்பலூர் சரக டிஎஸ்பி சரவணன் கபசுர குடிநீரை வழங்கினார். காமராஜர் வளைவு, பாலக்கரை, 3 ரோடு, 4 ரோடு, பழைய பஸ்டாண்டு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது போல், அரும்பாவூர், பாடாலூர், மருவத்தூர் போலீசாருக்கும் கபசுரக்குடிநீர் வழங்க பெரம்பலூர் டிஎஸ்பி சரவணன் ஏற்பாடு செய்திருந்தார்.

Related Stories: