கங்கையில் மிதந்த சடலங்கள் விவகாரம்; கங்கனாவை ஜெயில்ல போடுங்க சார்!: லாலுவின் மகள் கடுங்கோபம்

பாட்னா: பீகார் மாநிலம் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள்களில் ஒருவரான ரோகிணி, சமூக ஊடகங்களில் அவ்வப்போது பதிவுகளை போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவார். இவர், தந்தை லாலு பிரசாத் மற்றும் சகோதரன் தேஜஷ்வி யாதவ் ஆகியோருக்கு ஆதரவாக  குரல் எழுப்புவார். இந்நிலையில் பாலிவுட் சர்ச்சை நடிகையான கங்கனாவுக்கு எதிராக ரோகினி தனது கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரோகிணி தனது டுவிட்டர் பதிவில், ‘பாலிவுட் நடிகை கங்கனாவை சிறைக்கு அனுப்ப வேண்டும். கங்கனா  தனது மனதை முற்றிலுமாக இழந்துவிட்டார். அவர் மனித நேயத்திற்கு எதிராக செல்படுகிறார்.

கங்கையில் மிதக்கும் இறந்த உடல்களை, நைஜீரியாவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று கூறுகிறார். அவர் ஒரு போலி  ஜான்சியின் ராணியாக செயல்படுகிறார். சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும், அவரை சிறைக்கு அனுப்ப வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, கங்கை நதிக்கரையில் பிணங்கள் மிதப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தனது வீடியோவில் அதனை மறுத்த நடிகை கங்கனா, ‘கங்கையில் மிதக்கும் சடலங்கள் அனைத்தும், நைஜீரியா நதிகளில் மிதந்த பிணங்களின் புகைப்படங்கள்’ என்று பதிவிட்டிருந்தார். இவரது கருத்துக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அதேபோல், லாலு மகள் ரோகினியும் கங்கனாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: