கொரோனா நோயாளிகளை வெளியில் அனுப்பக்கூடாது என்பதே நோக்கம்!: இருக்கையில் அமர வைத்து சிகிச்சை அளித்ததற்கு ஆளுநர் தமிழிசை விளக்கம்..!!

புதுச்சேரி: புதுவை அரசு மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை இருந்தாலும் கொரோனா நோயாளிகளை வெளியில் அனுப்பக்கூடாது என்ற நோக்கத்தில் தான் இருக்கையில் அமர வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் படுக்கை பற்றாக்குறை, இறந்தவர்களை கையாள்வதில் அலட்சியம் உள்ளிட்ட குற்றசாட்டுகள் எழுந்தன. இதனை தொடர்ந்து, அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவ கல்லூரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இருக்கையில் அமர வைத்து சிகிச்சை அளித்ததற்கு விளக்கம் அளித்தார். தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் ஒரு வாரத்தில் கூடுதலாக 300 படுக்கைகள் உருவாக்கப்படும் என்றார். புதுவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை என்று அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். 

Related Stories: