அரியானாவில் பரபரப்பு விவசாயிகள் மீது தடியடி

புதுடெல்லி: அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். இப்போராட்டத்தில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் பெருமளவில் பங்கேற்றுள்ளனர். அரியானா, பஞ்சாப்  மாநிலங்களிலும் தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரியானாவின் ஹிசர் மாவட்டத்தின் ஹன்சி பகுதியில் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனை ஒன்று  திறக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று வந்தார். அப்போது அவருக்கு எதிராக விவசாயிகள் கோஷம் எழுப்பினர். போலீசார் வைத்திருந்த பேரிகார்டுகளையும் விவசாயிகள் தகர்த்தெறிந்தனர். இதனால்  விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டும் வீசியும் கூட்டத்தை கலைத்தனர். இதில் பல விவசாயிகள் காயம் அடைந்தனர்.

Related Stories: