தடுப்பூசி போட்டாலும் மாஸ்க் கட்டாயம்: எய்ம்ஸ் இயக்குநர் அறிவுரை

புதுடெல்லி: முழு தடுப்பூசி போட்டாலும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் கட்டாயம் என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறி உள்ளார். அமெரிக்காவில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் வீட்டிலும், வெளியிடங்களிலும் மாஸ்க் அணிய தேவையில்லை என அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா அளித்த பேட்டியில், ‘‘இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றே நினைக்கிறேன். அல்லது மாஸ்க் கட்டாயமில்லை என்று கூற நம்மிடம் இன்னும் நிறைய தகவல்கள் வேண்டும். கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருவதை பார்க்கிறேன். எனவே இனிவரும் புதிய உருமாற்றங்களில் இருந்தும் தற்போதைய தடுப்பூசிகள் பாதுகாக்கும் என உறுதியாககூறி விட முடியாது. எனவே உருமாற்றங்கள் இருந்தாலும், மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றினால் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை’’ என்றார்.

Related Stories:

>