டிஆர்டிஓவின் 2டிஜி மருந்து நாளை அறிமுகம்?

புதுடெல்லி:  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சார்பில் கொரோனா வைரசுக்கு எதிராக 2 டிஜி என்ற தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்துக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பவுடர் வடிவிலான இந்த மருந்தை தண்ணீரில் கலந்து குடிக்கக் கூடியது. இந்த தடுப்பு மருந்து அடுத்த வார தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வர இருப்பதாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக 10,000 பாக்கெட் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இது நாளை அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>