டவ்-தே புயலால் கேரளாவில் கனமழை: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: டவ்-தே புயலால் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை நீரும், கோழிக்கூட்டில் கடல் நீரும் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளார். தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலால் கேரளா, தமிழகம், கர்நாடக, குஜராத், மராட்டிய, கோவா ஆகிய 6 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கொச்சி, எர்ணாகுளம், கொல்லம், ஆகிய மாவட்டங்களில் நேற்றையதினம் பலத்த காற்றுடன்மழை பெய்தது. கோழிக்கூட்டில் செல்லானம் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையினால் குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது. கேரளத்தில் பல மாவட்டங்களில் சாலைகளில் இடுப்பளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கோழிக்கூட்டில் கடல் சீற்றம் காரணமாக கரையோரம் உள்ள பகுதிகளில் கடையோராம் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மலப்புரம், கோழிக்கூடு, கண்ணூர், காசாக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு அதி தீவிர மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. டவ்-தேபுயலால் கேரளாவில் நாளையும் காற்றுடன் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல இடங்களில் வெள்ளபெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கேரளாவின் 9 மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்ப்பு குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Related Stories: