உத்தர பிரதேசத்தில் உள்ள சிறையில் துப்பாக்கி சூடு: கைதி உள்பட 3 பேர் உயிரிழப்பு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள சிறையில் துப்பாக்கி சூடு நடத்திய கைதி உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி சிறையின் காவல் கண்காணிப்பாளர் அங்கித் மிட்டல்கூறியதாவது; கைதி துப்பாக்கி சூடு நடத்தும் தகவல் அறிந்து போலீசார் உடனடியாக சென்றனர்.  போலீசார் சென்றபொழுது, 2 கைதிகளும் உயிரிழந்து கிடந்தனர். இதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திய கைதியை சரணடையும்படி கேட்டு கொள்ளப்பட்டது.  ஆனால், போலீசார் மீதும் கைதி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  இதனால் தற்காப்புக்காக போலீசார் அந்த கைதியை சுட்டு கொன்றனர் என தெரிவித்து உள்ளார்.

Related Stories: