வன்முறை பாதித்த பகுதியில் ஆளுநர் தன்கர் நேரில் ஆய்வு

கூச் பெகர்:  மேற்கு வங்கத்தில் மம்தா அரசின் கடும் எதிர்ப்பை மீறி, வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆளுநர் தன்கர் நேரில் ஆய்வு செய்தார். மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதல்வராக மம்தா பானர்ஜி பொறுப்பேற்றுள்ளார். தேர்லுக்கு பின் அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக குழு ஆய்வு நடத்துகிறது. இதற்கிடையே, வன்முறை பாதித்த  கூச் பெகர் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிடப் போவதாக அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார். இதற்கு மாநில அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது எனக் கூறியது. இதை மீறி ஆளுநர் தன்கர் நேற்று கூச் பெகர் பகுதிக்கு நேரில் சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார். இதற்கிடையே, ஆளுநரின் வருகையை எதிர்த்து சிலர் கறுப்பு கொடி காட்டினர்.

Related Stories: