கமல் கட்சி கூடாரம் காலியாகிறது ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு ராஜினாமா: பெண் நிர்வாகியும் விலகல்

சென்னை: தேர்தலில் மக்கள் நீதி மய்யம். சில கருத்து கணிப்புகளில் 5 தொகுதிகள் வரை இந்த கட்சி வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதற்கு மாறாக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் படு தோல்வி அடைந்தது. . கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூட வெற்றி பெற முடியவில்லை. இதையடுத்து கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தபோது, திடீரென கூண்டோடு 10 நிர்வாகிகள் தங்களது ராஜினாமா கடிதத்தை தலைமையிடம் சமர்ப்பித்தனர். துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன், பொதுச்செயலாளர்கள் சி.கே.குமரவேல், மவுரியா, முருகானந்தம், நிர்வாக குழு உறுப்பினர் உமாதேவி, பொன்ராஜ் உள்பட 10 பேர் கட்சியிலிருந்து விலகினர். இது கமல்ஹாசனுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இதில், ‘துணைத் தலைவர் மகேந்திரனை நானே நீக்குவதாக இருந்தது. அவர் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார்’ என கமல்ஹாசன் பரபரப்பு புகார் கூறினார். இதற்கு பதிலளித்த மகேந்திரன், ‘கட்சி, ஜனநாயகத்துக்கு விரோதமாக செயல்பட்டு வருவதாகவும் ஒரு சிலரால் கமல்ஹாசன் தவறாக வழிநடத்தப்படுவதாகவும்’ குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு , நேற்று காலை திடீரென தனது அடிப்படை உறுப்பினர் மற்றும் தலைமை நிலைய பொதுச்செயலாளர் பதவியை சந்தோஷ் பாபு ராஜினாமா செய்துள்ளார். அவர் கூறும்போது, ‘கனத்த இதயத்துடன் இதை அறிவிக்கிறேன். எனது சொந்த பணிகள் காரணமாக மநீமவிலிருந்து விலகுகிறேன். நட்புடன் பழகிய கமல்ஹாசனுக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார். இதனால் கமல்ஹாசன் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்நிலையில் கட்சியின் சுற்றுச்சூழல் துறை மாநில செயலாளராக இருந்த பத்மபிரியாவும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாகவும் நேற்று அறிவித்தார்.

Related Stories: