பிரபல திரைக்கதை ஆசிரியர் மரணம்

திருவனந்தபுரம்: மலையாள சினிமா உலகில் 1980-90 கால கட்டத்தில் திரைக்கதை எழுதுவதில் பிரசித்தி பெற்றவர் டென்னிஸ் ஜோசப். மோகன்லால், மம்மூட்டி நடித்துள்ள ஏராளமான சூப்பர் ஹிட் படத்துக்கு திரைக்கதை எழுதி உள்ளார். மோகன்லாலுக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்று தந்த ராஜாவின் டெ மகன் என்ற படத்துக்கும் டென்னிஸ் ஜோசப் திரைக்கதை எழுதியது குறிப்பிடத்தக்கது. இது தவிர மோகன்லால், மம்மூட்டி இணைந்து நடித்த நம்பர் 20 மதராஸ் மெயில், மம்மூட்டி நடித்த கோட்டயம் குஞ்சச்சல், சங்கம், நாயர் சாப், மனு அங்கிள், மோகன்லால் நடித்த இந்திரஜாலம் உள்பட 65 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். இது தவிர 5 படங்களையும் இயக்கி உள்ளார்.

முதன்முதலாக இயக்கிய மனு அங்கிள், ஆகாச தூது ஆகிய படங்களுக்கு தேசிய விருதும் கிடைத்து உள்ளது. இவரது திரைக்கதையை கேட்பதற்காக நடிகர் ரஜினிகாந்த், மணிரத்னம் ஆகியோரும் முக்கியத்துவம் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோட்டயம் மாவட்டம் ஏற்றுமானூரில் உள்ள வீட்டில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே வீட்டில் உள்ளவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் டென்னிஸ் ஜோசப் இறந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் பினராய் விஜயன் உள்பட பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: