பாஜ சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு

சென்னை,: பாஜ சட்டமன்ற குழு தலைவராக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜ சட்டமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் தேர்வுக்கான கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, பொதுச்செயலாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் எல்.முருகன், சுதாகர ரெட்டி மற்றும் புதிதாக வெற்றிபெற்ற பாஜ சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து, கூட்டத்தில் நயினார் நாகேந்திரனை பாஜ சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுத்தனர்.  

Related Stories:

>