வேகமெடுக்கும் கொரோனா கேரளாவில் நாளை முதல் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதை தொடர்ந்து நாளை (8ம் தேதி) முதல் 16ம் தேதி வரை 9 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தினமும் நோய் அதிகரித்து வருவதால் கடந்த 4ம் தேதி முதல் கேரளா முழுவதும் மினி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளுக்கு மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நோய் பரவல் மேலும் மேலும் அதிகரிப்பதை தொடர்ந்து நாளை (8ம் தேதி) முதல் 16ம் தேதி வரை 9 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த கேரள அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி குறிப்பிட்ட நேரத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும். மருத்துவமனை சேவைகள், சமையல் எரிவாயு சப்ளை மற்றும் சரக்கு போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட மாட்டாது. பொதுப் போக்குவரத்து இருக்காது. தடையை மீறி வெளியே செல்லும் தனியார் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

Related Stories: