2 மாதங்களுக்கு இலவச ரேஷன்: மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்

புதுடெல்லி: பிரதமரின் ஏழைகள் நல உதவித் திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பங்களுக்கு 2 மாதங்களுக்கு ரேஷன் உணவுப் பொருள்களை இலவசமாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், மே, ஜூன் ஆகிய 2 மாதங்களுக்கு இலவசமாக ரேஷன் உணவுப் பொருள்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஏழைக் குடும்பங்களின் பொருளாதார சிரமங்களைத் தணிப்பதற்கு இந்த அறிவிப்பு உதவும்.

இந்தத் திட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்கு 5 கிலோ உணவு தானியம் வீதம், 79.88 கோடி பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். 80 லட்சம் டன் உணவு தானியம் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும். இவற்றை இலவசமாக வழங்குவதால் அரசுக்கு ரூ.25,332.92 கோடி செலவாகும்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: