கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர மக்கள் ஒத்துழைப்பு அளிக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: டெல்லி, கேரளா போன்று வரும் மாதங்களில் மற்ற மாநிலங்களுடைய நிலையும் ஏற்படுமோ ஏன்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. இது தொடருமேயானால் மருத்துவமனைகளில் இடம் கிடைப்பதில் சங்கடங்களும், ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்படலாம். ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர பல வகைகளில் கண்டிப்போடும், கோட்பாடுகளோடும் செயல்பட்டுக்கொண்டு இருந்தும் கூட, இந்த பெரும் தொற்று பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு இல்லையென்றால் கொரோனாவை படிப்படியாக குறைக்க பல மாதங்கள் ஆகும். அவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவும். எனவே கொரோனாவின் கட்டுப்பாடுகளையும், கோட்பாடுகளையும் கடைப்பிடித்து, மக்கள் முழ ஒத்துழைப்பு அளித்து, வீட்டையும், நாட்டையும் காக்க வேண்டும்.

Related Stories:

>