கேரளாவில் பாஜக பூஜ்ஜியம்; போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவு: ஆட்சியை தக்கவைத்தார் பினராய் விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில், ஏற்கனவே கருத்து கணிப்புகளில் கணித்தப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி வெற்றியை ருசித்துள்ளது. முதல்வர் பினராய் விஜயன் 2வது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளார். இந்த கூட்டணிக்கு 86 இடங்கள் கிடைத்தன. இது, கடந்த 2016 தேர்தலில் பெற்ற இடங்களை விட 7 இடங்கள் குறைவுதான். இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 71. அதை விட கூடுதலாக இடதுசாரி முன்னணி பெற்றுள்ளது.

அதேபோல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது, 2016 தேர்தலில் பெற்றதை விட 8 இடங்களில் கூடுதலாகும். காங்கிரஸ் முன்னாள் தலைவர், பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் தீவிர பிரசாரத்தால் காங்கிரஸ் கூட்டணிக்கு இந்த கூடுதல் வெற்றி கிடைத்துள்ளது. தனித்து போட்டியிட்ட பாஜ, 3 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. இருப்பினும், இது கடந்த தேர்தலில் பெற்றதை விட 2 இடங்கள் கூடுதலாகும்.

பாஜ.வின் ‘மெட்ரோ மேன்’ தேர்தல் வியூகம் படுதோல்வி

பாஜ.வில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பதவி கிடையாது, தேர்தலில் போட்டியிட முடியாது என்ற கொள்கை தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்த அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட ஏராளமான தலைவர்கள், இந்த காரணத்தை காட்டி ஒதுக்கி வைக்கப்ப்டடு உள்ளனர். ஆனால், கேரளாவை இந்த கொள்கையை கைவிட்ட பாஜ., இம்மாநில மக்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்படும் ‘மெட்ரோ மேன்’ என்ற ஸ்ரீதரனை தேர்தலுக்கு முன்பாக களத்தில் இறக்கியது. அவரையே பாஜ.வின் முதல்வராக வேட்பாளராகவும் அறிவித்து, குளறுபடிகள் செய்தது.

இவரின் நற்பெயரை வாக்குகளாக மாற்ற நினைத்த பாஜ.வின் தந்திரம், இத்தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஸ்ரீதரன் தான் போட்டியிட்ட பாலக்காடு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.

Related Stories: