6-ம் கட்ட மக்களவைத் தேர்தல் விறுவிறு: 9 மணி நிலவரப்படி 10.82 சதவீத வாக்குகள் பதிவு

டெல்லி: 6-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 18வது மக்களவை தேர்தல் ஏப்.19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டமாக நடக்கிறது. ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. 428 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. 6வது கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் 6 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களில் இந்த ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை தேர்தல் நடக்கிறது.

இந்த 58 தொகுதிகளிலும் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 11.13 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். இதற்காக 1.14 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளனன. 11.4 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 6-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. பீகார் 9.66%, அரியானா 8.31%, – ஜம்மு- காஷ்மீர் 8.89%, ஜார்க்கண்ட் – 11.74%, டெல்லி 8.94%, ஒடிசா 7.43%, உத்தரப் பிரதேசம் 12.33%, மேற்குவங்கம் 16.54% வாக்குகள் பதிவாகி உள்ளன
.

The post 6-ம் கட்ட மக்களவைத் தேர்தல் விறுவிறு: 9 மணி நிலவரப்படி 10.82 சதவீத வாக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: