ஹிசார்: அரியானாவில் 300க்கும் ேமற்பட்ட சடலங்களை எரியூட்டிய மாநகராட்சி அதிகாரி, கொரோனா தொற்று பாதிப்பால் பலியானார். அரியானா மாநிலம் ஹிசார் மாநகராட்சி அதிகாரி பிரவீன் குமார் (43). இவர், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளான நோயாளிகளின் சடலங்களை தகனம் செய்யும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்தாண்டு முதல் ஹிசார் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில், கொேரானா தொற்றால் இறந்தவர்களின் 300க்கும் மேற்பட்ட நோயாளிகளின் சடலங்களை எரியூட்டி தகனம் செய்வதற்கான நடைமுறைகளை கண்காணித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. அதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது ஆக்சிஜன் அளவு குறைந்ததால், சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் கோவிட் -19 வழிகாட்டுதலின் கீழ் ரிஷி நகரில் அமைந்துள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இறந்த பிரவீன் குமார், முனிசிபல் கார்ப்பரேஷன் சஃபாய் கரம்சாரிஸ் யூனியனின் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது….
The post 300 சடலங்களை எரியூட்டிய அதிகாரி கொரோனாவுக்கு பலி appeared first on Dinakaran.