சமீப காலமாக, நாட்டின் பொருளாதாரம், வரலாறு காணாத வகையில் மிக மோசமாக பாதித்துள்ளது; மிக கடினமான சூழ்நிலையை நாடு எதிர்கொண்டுள்ளது. தொழிலாளர்களின் வருவாயில் தேக்கநிலை, ஏற்ற தாழ்வு, பணவீக்கம் அதிகரிப்பு போன்ற பிரச்னைகளால் வருங்காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருமளவில் வீழ்ச்சி அடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஒன்றிய அரசு சமீபத்தில் வெளியிட்ட, 2022- 23ம் ஆண்டுக்கான வருடாந்திர தொழில் துறை புள்ளி விவரம், 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது, தொழிலாளர்கள் குறைந்த அளவே பொருட்களை வாங்க முடிவதாக தெரிவிக்கிறது.
தொழிலாளர்களின் ஊதியம் அதிகரிப்பதில் தேக்க நிலை அடைந்துள்ளதே இதற்கு காரணம். இதன் விளைவாக நாட்டின் பெரும்பாலான குடும்பங்கள் உபரி வருவாய் இன்றி தவிக்கின்றன. இதனால், மக்களின் நுகர்வு முறையில் பெரிய சறுக்கல் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2015ல் 100 ரூபாய் மதிப்புள்ள பொருளை ஒருவர் வாங்கினால், அதன் உற்பத்தியாளருக்கு லாபமாக 18 ரூபாய் கிடைத்தது. ஆனால் தற்போது, 36 ரூபாய் லாபம் கிடைக்கிறது. முதலாளிகளுக்கு சாதகமான திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருவதே இதற்கு காரணம். இதனால் அதானி போன்றோர் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post ஒன்றிய அரசின் தவறான செயல்பாட்டால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடும் வீழ்ச்சி: காங்கிரஸ் எச்சரிக்கை appeared first on Dinakaran.