மீண்டும் ஓட்டுச்சீட்டு முறை வேண்டும்: காங். கருத்து

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான மணீஷ் திவாரி கூறுகையில்,’ உலகம் முழுவதும் இவிஎம் கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளில் கூட மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பி விட்டார்கள். அவர்கள் எல்லாம் இந்தியாவிற்கு முன்பாகவே இவிஎம் எந்திரத்தை பயன்படுத்தியவர்கள். ஏனெனில் ஜனநாயகம் என்பது நவீன தொழில்நுட்பத்தை விட மிகவும் விலைமதிப்பற்றது என்பதை மட்டும் தேர்தல் ஆணையம் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நாட்டை மீண்டும் காகித வாக்குச்சீட்டுக்கு கொண்டு செல்லும் முயற்சியை எடுங்கள். ஜனநாயகம் மிகவும் விலைமதிப்பற்றது. அரியானா தேர்தலில் பயன்படுத் தப்பட்ட மின்னணு இயந்திர பேட்டரி வாக்கு எண்ணிக்கை யின்போது 99 சதவீத ஆயுளை கொண்டு இருந்தது அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்று கூறியுள்ளார்.

The post மீண்டும் ஓட்டுச்சீட்டு முறை வேண்டும்: காங். கருத்து appeared first on Dinakaran.

Related Stories: