தற்போதுள்ள நடைமுறைப்படி, வெடிகுண்டு மிரட்டல் மதிப்பீட்டு குழு (பிடிஏசி) சம்பந்தப்பட்ட விமான நிலையத்தில் கூடி, அந்த மிரட்டல் கவலை தரத்தக்கதா, முக்கியத்துவம் தந்து நடவடிக்கை எடுக்கத் தக்கதா என தீர்மானிக்கும். இந்த குழுவில் பிசிஏஎஸ், மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்), உள்ளூர் போலீஸ், விமான சேவை அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம் பெறுவர். குறிப்பிட்ட மிரட்டல் ஆபத்தானதாக அறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விமானத்தை வேறு பாதையில் திருப்பி விடல், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் அல்லது இயக்கத்தின் அடையாளத்தை சிறப்பு குழு உறுதி செய்யும். அந்த நபர் தீவிரவாதத்துடன் தொடர்புள்ளவரா என்பதும் விசாரணைகளின் மூலம் உறுதி செய்யப்படும். அதன் பின், மிரட்டல் விடுக்கப்பட்ட விமானத்தில் விஐபி அல்லது விவிஐபி யாராவது உள்ளனரா என்பது கண்டறியப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சமூக ஊடகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஐடி போலியானதா, பெயரை மறைத்து செயல்படுகிறதா, ஒரே ஐடி மூலம், பல முறை வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதா என்பதை சிறப்பு குழு ஆராயும். புதிய விதிமுறைகள், அமலுக்கு வந்த பிறகும் 400க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் போலியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் விமானங்கள் காலதாமதம் ஆவது தவிர்க்கப்பட்டுள்ளது.
The post விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அதிகரிப்பு உடனடி நடவடிக்கை எடுக்க புதிய விதிமுறைகள் அமல் appeared first on Dinakaran.