தமிழகத்துக்கு 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது: சுகாதார துறை தகவல்

சென்னை: சென்னைக்கு நேற்று 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்துள்ளது. கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி தற்போது படிப்படியாக தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை அரசு வழிகாட்டு ெநறிமுறைகளின்படி நேற்று முன்தினம் வரை 56,68,479 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஏற்கனவே 69.85 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிக தடுப்பூசி தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி தடுப்பூசி கிடைத்திட 1.5 கோடி தடுப்பூசிகள் பெற ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது. மும்பையில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்த 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இதுவரை கோவிஷீல்டு 57,03,590 மற்றும் கோவாக்சின் 10,82,130 என இதுவரை 67 லட்சத்து 85 ஆயிரத்து 720 டோஸ் தடுப்பூசி பெறப்பட்டு இருந்த நிலையில் நேற்று வந்துள்ள 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியையும் சேர்த்தால் மொத்தம் 70,85,720 டோஸ் தடுப்பூசி இதுவரை வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: