சிஎஸ்கே - ஆர்சிபி பலப்பரீட்சை

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 3.30க்கு தொடங்கும் லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களூர் அணிகள் மோதுகின்றன. நடப்புத் தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை  முதல் ஆட்டத்தில் டெல்லியிடம்  7 விக்கெட் வித்தியாசத்தில் மண்ணை கவ்வியது. அதன் பிறகு ‘ஸ்பார்க்’ தெறிக்க   பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தியது. அதே உற்சாகத்துடன் தோனி தலைமையிலான சிஎஸ்கே இன்று பெங்களூரை எதிர்கொள்கிறது. டு பிளெஸ்ஸி, மொயீன் நல்ல பார்மில் உள்ளனர். 5, 5, 10 என தொடக்கத்தில் தடுமாறிய ருதுராஜ் கடந்த போட்டியில் அதிரடியாக 64 ரன் குவித்தார்.

பந்துவீச்சில் என்ஜிடி வரவு அணிக்கு பலம் சேர்த்துள்ளது. அதே சமயம், நடப்பு சீசனில் விளையாடிய 4 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வென்றுள்ள ஆர்சிபி அணி மிகுந்த தன்னம்பிக்கையுடன் சிஎஸ்கே சவாலை சந்திக்கிறது. கோஹ்லி, படிக்கல், டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல், சுந்தர் ஆகியோரை கட்டுப்படுத்துவது சென்னை பவுலர்களுக்கு சிரமம் தான். இரு அணிகளுமே வெற்றிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் உறுதியுடன் உள்ளதால், ஆட்டம் மிகவும் சுவாரசியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

சிஎஸ்கே ஆதிக்கம்: ஆர்சிபி அணியுடன் 26 முறை மோதியதில், சென்னை 16-9 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 2012ல்  ஒரு லீக் ஆட்டம் கைவிடப்பட்டது. பிளே ஆப் (2009, 2011, 2015)  மற்றும் பைனலில் (2011) மோதிய 4 முறையும் சென்னையே வென்றுள்ளது.  கடைசியாக மோதிய 5 போட்டியில் சென்னை 5-2 என முன்னிலை வகிக்கிறது. அதிகபட்சமாக  சென்னை 208 ரன்,  பெங்களூர் 205 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக சென்னை 82, பெங்களூர்  70 ரன்னில் சுருண்டுள்ளன.

Related Stories: